புதுடில்லி : சர்வதேச அளவில், சாதாரண விஷயத்துக்கும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கலவரங்களை ஒடுக்க ஆயுதங்களும் பல பரிமான வளர்ச்சிகளை பெற்று வருகிறது.
இந்த வரிசையில் டிபன்ஸ் ரிசேர்ச் மற்றும் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (டி.ஆர்.டி.ஓ.,) புது முயற்சியில் இறங்கியுள்ளது. கலவரங்களின் போது கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை கக்கும் கையெறி குண்டுகள் பயன்படுத்துவது வழக்கம் , தற்போது அவற்றிற்கு பதிலாக மிளகாய்களால் ஸ்டப் செய்யப்பட்ட கையெறி குண்டுகளை பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என கருதப்படுகிறது அசாமில் விளையும் ஒரு வகை மிளகாய்கள். இந்த மிளகாய்களை பயன்படுத்தி கையெறி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை வெடிக்க செய்தால், ஏற்படும் நெடி மூச்சுத் திணறலை ஏற்படுத்துமாம். இண்டு இடுக்களில் பதுங்கியிருக்கும் கலவரக்காரர்களை கூட வெளியில் கொண்டு வந்து விடுமாம் இந்த நெடி. இருப்பினும் இந்த புகையால் மரணம் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படைகளான, சி.ஆர்.பி.எப்., துணை ராணுவ படையினர் ஆகியோருக்கு இந்த குண்டுகள் மிகவும் உபயோகரமாக இருக்கும் என திட்ட இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். உயிர் சேதம் ஏற்படுத்தாமல் கலவரங்களை ஒடுக்குவதற்காக இவ்வகை குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply