டெல்லி: கேஜி காஸ் விவகாரம் தொடர்பாக முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையிலான பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிடவோ அல்லது மத்தியஸ்தம் செய்யவோ முயலவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், கிருஷ்ணா- கோதாவரி காஸ் திட்டம் தொடர்பாக அம்பானி சகோதரர்களிடையே நடந்து வரும் மோதலில் பிரதமர் எந்த வகையிலும் தலையிடவில்லை. மத்தியஸ்தம் செய்யவும் முயலவில்லை.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அம்பானி சகோதரர்கள் இந்தப் பிரச்சினையில் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
பிரதமரின் விருப்பமும் இதுதான். இது அம்பானி சகோதரர்களுக்கும் கூறப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபடுவதை விட இரு சகோதரர்களும் சமசரசமாகி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் என்றார் அவர்.
Leave a Reply