ஆமதாபாத்: பள்ளி வளாகத்தில் மொபைல் போனில் பேச சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தடை விதித்துள் ளது. மொபைல் போனை விட்டு பிரிய முடியாத சூழ் நிலை மக்களிடையே நாளு க்கு நாள் வளர்ந்து வருகிறது.
பள்ளி மாணவர்கள் மத்தியிலும் மொபைல் போன் பிரபலமாக உள்ளது. பள்ளி வளாகத்திலும், வகுப்பறையிலும் மொபைல் போனை வைத்து கொண்டு மாணவர்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.
எனவே, பள்ளி வளாகத்தில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. பள்ளி முதல்வர், ஆசிரியர் முதல் கொண்டு மாணவர்கள் வரை பள்ளி வளா கத்தில் மொபைல் போனில் பேச தடை விதிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ., நிர்வாகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கடந்த வார இறுதியில் மொபைல் போன் பேச தடை விதிக் கும் சுற்றறிக்கை கிடைத் துள்ளது. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில், கேமரா வசதியுடன் கூடிய மொபைல் போன் அதிக பிரச்னைகளை ஏற்படுத்துவதால், பள்ளிகளில் கல்விக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. மொபைல் போன் தடையை சில ஆசிரியர்களும் மாணவர்களும் பெற் றோரும் வெளிப்படையாக வரவேற்றுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் மொபைல் போனில் பேசினால் என்ன தண்டனை என்பது இதுவரை இன்னமும் குறிப்பிடப்படவில்லை.
Leave a Reply