கோவை:””தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களை அரசு ஊக்குவிப்பதோடு, பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கும்,” என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.”காக்னிஸன்ட்’ நிறுவனம், 180 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் மையத்தை, கோவையை அடுத்துள்ள கீரணத்தத்தில் அமைத்துள்ளது.
இம்மையத்தை திறந்து வைத்து ஸ்டாலின் பேசியதாவது:தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதற்கு காரணம், 1997ல் முதல்வர் ஏற்படுத்திய தகவல் தொழில்நுட்பக் கொள்கையே காரணம். உலக அளவில் பொருளாதாரத் துறையில் சீர்குலைவு ஏற்பட்டாலும், இந்தியாவின் வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. தமிழகம் சிறிய அளவுக்கு கூட பாதிப்படையவில்லை. இதற்கு காரணம், தமிழகத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகள் இருப்பதே காரணம்.
சிறந்த தொழில்துறை, உலகத்தரம் வாய்ந்த ஆற்றலை பார்த்து, பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இந்திய பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மிகச்சிறந்த தொழில்கள் கொண்ட மாநிலமாக, பிற மாநிலங்களால் போற்றப்படுகிறது.கடந்த 2008-09ம் ஆண்டில், தமிழகத்தில் 29 ஆயிரத்து 490 கோடி ரூபாயாக இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, 2009-10ல் 36 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்கா, அனைத்து நிறுவனங்களுக்கும் உற்பத்தி மையமாக செயல்படும். கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் திறக்கப்பட்டு வருகின்றன.இத்தொழிலில் முதலீடு செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு ஊக்கமளிப்பதோடு, பல வழிகளில் ஆதரவளிக்கும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார். விழாவில், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, காக்னிஸன்ட் நிறுவனத் தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல் தொழில்நுட்ப பூங்காமத்திய அரசு தரும் சலுகைகள்: “”தகவல் தொழில்நுட்ப பூங்காவை 25 சதுர கி.மீ., பரப்பளவில் அமைக்க முன்வந்தால், மத்திய அரசு சார்பில் ரயில், துறைமுக வசதி செய்து தரப்படும்,” என்று மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார். காக்னிசென்ட் நிறுவனம் கோவையை அடுத்துள்ள கீரணத்தத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் ஏழு அடுக்கு மாடிகளை கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. துவக்க விழாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இல்லாத இடங்களில் பெரிய நிறுவனங்கள் தொழில் துவங்கினால், செமிகண்டக்டர் கொள்கையின் கீழ், அந்நிறுவனங்களுக்கு 20 சதவீதத்துக்கு மானியத்தை மத்திய அரசு அளிக்கும்.அதன்படி இதுவரை 60 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு, அமைச்சர் ராஜா பேசினார்.
Leave a Reply