சென்னை: ரூ.100 கோடி செலவில் தென் இந்தியாவில் புதிய யூனிட்டைத் துவக்குகிறது பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான பெர்ஜர் பெயின்ட் இந்தியா.
இந்த யூனிட் மூலம் ஆண்டுக்கு 100000 டன்கள் நீர்ம அடிப்படையிலான பெயின்ட் தயாரிக்கப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டுபிர் போஸ் தெரிவித்தார்.
இந்த புதிய யூனிட்டுக்காக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாம் பெர்ஜர். 2011-ல் இந்த யூனிட் முழுமையாக செயல்படத் துவங்கும்.
இன்றைக்கு தண்ணீர் கலந்து பயன்படுத்தும் வகையிலான பெயின்ட்டுக்குதான் தேவை அதிகமாக இருப்பதாகவும், சால்வன்ட் அடிப்படையிலான பெயின்டுக்கு தேவை அந்த அளவு இல்லாததாலுமே, இந்தப் புதிய யூனிட் அமைக்கப்படுவதாக சுபீர் போஸ் கூறினார்.
தற்போதுள்ள இந்த நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலைக்கு அருகிலேயே 24000 டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய யூனிட் சமீபத்தில் துவங்கப்பட்டது.
Leave a Reply