பண்ணைசாரா கடன்களுக்கு வட்டி தள்ளுபடி

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_31758844853விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மூலம் பண்ணைசாரா கடன் பெற்றவர்களுக்கு, சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தில் வட்டி தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ணை சாரா கடன் தீர்வுத்திட்டத்தின் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் கடன் பெற்றவர்கள் பயன் பெறலாம். பயன்பெறுவோர்:

தவணை தவறிய சிறு வணிக,போக்குவரத்து கடன், கைத்தறி, பவர் லூம் கடன், தொழிற்கடன், வாணிபக்கடன், பத்திர ஈட்டு கடன்கள் போன்ற பண்ணைசாரா கடன்களுக்கு தீர்வுத்திட்டத்தில் வட்டி தள்ளுபடி செய்து பயன் பெறலாம்.

சலுகைகள்: 31.03.2007 அன்று முழுமையாக கடன் தவணை தவறி, 22.7.2009 அன்று நிலுவையில் உள்ள பண்ணைசாரா கடன்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும். கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 6 சதவீத சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் கணக்கிடப்பட்ட நிலுவைத்தொகையில் 25 சதவீத தொகையை கட்டி 31.10.2009 க்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள், அதிக பட்சமாக மூன்று தவணைக்குள் கட்ட வேண்டும். கடன்தாரர் தொகை திருப்பி செலுத்தியிருந்தால், அந்தந்த தேதிகளில் நிலுவையிலிருந்த அசல் மற்றும் வட்டிக்கு ஈடு செய்து இறுதித்தொகை கணக்கிடப்படும். கணக்கிடும்போது நிலுவைத்தொகையை விட கடன்தாரர் திருப்பி செலுத்திய தொகை அதிகமாக இருந்தால் கடன் தீர்வு செய்யப்பட்டதாக கருதப்படும். தொகை ஏதும் திருப்பி வழங்கப்படமாட்டாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *