கொழும்பு:விடுதலைப் புலிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியதாக புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவரான செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் ரகசிய இடத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து, பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள தகவல்:புலிகள் அமைப்புக்கு அணு ஆயுங்களை வாங்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் அணு ஆயுதங்களை வாங்கியிருந்தால், அது மற்ற பயங்கரவாத அமைப்புகளின் கைகளுக்கும் போய் சேர்ந்திருக்கும்.அமெரிக்காவில் உள்ள ஒரு ஆயுத விற்பனையாளரிடம் இருந்து, புலிகள் அமைப்புக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கப்பட்டு, அவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், தற்போதைய இலங்கை அமைச்சருமான கருணா கூறுகையில், “பத்மநாதனுக்கு பின், புலிகள் அமைப்புக்கு தலைமையேற்க வேறு யாரும் இல்லை. புலிகள் அமைப்பின் சர்வதேச நெட்ஒர்க் முழுவதும் பத்மநாதனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது’என்றார்.
Leave a Reply