பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வலை வீச்சு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

posted in: உலகம் | 0

paththima_issminகொழும்பு நகரில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி.) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் ரி.ஐ.டி.யினர் அவசர உதவியை கோரியுள்ளனர்.

கொழும்பு 12. பழைய சோனகத் தெருவைச் சேர்ந்த அப்துல் சலாம் பாத்திமா ஜஸ்மின் (வயது 25) என்ற முஸ்லிம் பெண் தற்கொலைக் குண்டுதாரியையே தாங்கள் தேடி வருவதாக ரி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர்.

அது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் உடனடியாக படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரி எனக் கூறப்படும் பாத்திமா ஜஸ்மின் தொடர்பாக பொலிஸார் பின்வரும் தகவல்களைத் தந்துள்ளனர்.

முகவரி: பழைய சோனகத் தெரு, கொழும்பு 12.

அடையாள அட்டை இலக்கம்: 857835641V

பிறந்த திகதி: 09-10-1985

இவர் பற்றிய விபரங்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *