மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்களின் தேவைக்காக இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிவிசனல் மண்டல நிர்வாகி அனில் சிங்கால் அளித்த பேட்டியில் : 4 பேர் அமரும் வசதி கொண்ட இந்த பேட்டரி காரை பர்ஸ்ட் ககம் பர்ஸ்ட் செர்வ் என்ற அடிப்படையில் புக் செய்து கொள்ளலாம். புக்கிங் செய்ய 98948-56789 என்ற டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். புக் செய்த நபர்கள் ஸ்டேஷன் வாயிலில் இருந்து அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் கோச் வரை சென்று இறக்கி விடும் என்றார்.
Leave a Reply