சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுகிறார்கள். அதனால் அவர்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கிவைக்கவுள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுகிறார்கள்.
சில மாணவர்கள் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செல்வார்கள். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி விட்டு மாலையில் வழக்கமான நேரத்திற்கு வீடு திரும்பி விடுவார்கள். குறிப்பாக 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதை தடுப்பதற்காக மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் அவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனில் தகவல் தெரிவிக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டத்தை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மேயர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாத இறுதிக்குள் சென்னையில் உள்ள 27 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதேபோல மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் திட்டத்தையும் மேயர் மா. சுப்பிரமணியன் வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
Leave a Reply