டெல்லி: ரூ.7800 கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு ஆகியோரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரவினர் ஜப்தி செய்துவிட்டனர்.
இந்தியாவில் இவ்வளவு சொத்துக்களை ஒரே நேரத்தில் ஜப்திக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் சூர்யநாராயணா, அவரது குடும்பத்தினர் ஆகியோருக்குச் சொந்தமான, 287 சொத்துக்களை, பணமோசடி தடுப்பு சட்டம் 2002ன் கீழ் ஜப்தி செய்வதாக, அமலாக்க இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த சொத்துக்கள், விற்கவோ அல்லது பிற பண பரிவர்த்தனை பயன்பாட்டிற்கோ தகுதியற்றதாகிவிட்டன.
இந்த சொத்துக்கள் அனைத்தும் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களின் தற்போதைய மொத்த மதிப்பு 1,000 கோடி ரூபாய். சொத்துக்களைக் கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடக்கின்றது.
மேலும் ராஜு சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமான, சத்யம் நிறுவன பங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பங்குகளின், தற்போதைய மதிப்பு 24 கோடி ரூபாய்.
Leave a Reply