விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலும் சிக்கல் : புதிய தலைவரையும் பிடித்தது இலங்கை ராணுவம்

posted in: உலகம் | 0

tblfpnnews_7881891728கொழும்பு : விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளதை அடுத்து, அந்த அமைப்புக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் வீழ்ச்சிக்கு பின், மீண்டும் தலை தூக்க முயற்சித்த புலிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு சண்டை, கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. பிரபாகரன் உட்பட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இறுதிக் கட்ட சண்டையில் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்த இலங்கை அரசு, நிம்மதி பெருமூச்சு விட்டது. இந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவராக இருந்த கே.பி., என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், அந்த அமைப்பின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். இலங்கைத் தமிழர்களுக்கென நாடு கடந்த ஒரு அரசை உருவாக்கப் போவதாக அவர் அறிவித்தார். கே.பி., தலைமையில் மீண்டும் அந்த அமைப்பு தலைதூக்க முயற்சிப்பதைக் கண்ட இலங்கை அரசு கலக்கமடைந்தது. சர்வதேச நாடுகளின் உதவியோடு அவரை வளைக்க முயற்சித்தது. இலங்கை அரசின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. தாய்லாந்தில் கே.பி.,யை கைது செய்ததாக நேற்று முன்தினம் இரவு இலங்கை ராணுவம் அறிவித்தது. தற்போது கே.பி.,யிடம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள், கொழும்பில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாகரன் வீழ்ச்சிக்கு பின், பெரும் பின்னடைவை சந்தித்த புலிகள் அமைப்பு, கே.பி., தலைமையில் மீண்டும் செயல்பட முயற்சித்தது. தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளதால், புலிகளின் முயற்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. அதிபர் ராஜபக்ஷே எடுத்த இந்த அதிரடியால், இலங்கை பங்கு வர்த்தக சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது, வர்த்தக வட்டாரத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.

விசாரணையை துவக்கியது இலங்கை: கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனிடம் (கே.பி.,) ரகசியமான இடத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள், துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்ட இடம் மலேசியாவா, தாய்லாந்தா என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. சர்வதேச அளவில், கே.பி., யின் செயல்பாடுகள் கொடிகட் டிப் பறந்ததால், புலிகள் அமைப் பின் சர்வதேச விவகாரங்களுக் கான தலைவராக நியமிக்கப்பட் டார். மியான்மர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கே.பி.,யிடம், 12க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய நபர்: இலங்கை ராணுவத்தால் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும், வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த கே.பி., இந்தத் தகவலை மறுத்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, பிரபாகரன் கொல்லப் பட்டது உண்மை தான் என அறிவிப்பு வெளியிட்டார். ஒரு சில நாட்களிலேயே தனது கருத்தை மாற்றித் தெரிவித்ததால், புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் இவரை எதிர்த்தனர். இதனால், சர்ச்சைக்குரிய நபராகவும் கருதப்பட்டார். இலங் கைக்கு வெளியில், இலங்கைத் தமிழர்களுக்கென “நாடு கடந்த ஒரு அரசை உருவாக்கப் போவதாகவும்’ தெரிவித்தார்.

புதிய தலைவர்: கடந்த சில நாட்களுக்கு முன், விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவும் கே.பி., அறிவிக்கப் பட்டார். இவரது தலைமையில் தொடர்ந்து செயல்படப் போவதாகவும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர், புலிகள் ஆதரவு இணைய தளங்களில் தெரிவித்தனர். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழியில் போராடப் போவதாகவும் இவர் கூறினார்.

அதிரடி கைது: கே.பி., தலைமையில் புலிகள் அமைப்பு மீண் டும் தலை தூக்குவதைக் கண்காணித்து வந்த இலங்கை அரசு, சர்வதேச அளவிலான உதவியைக் கோரியது. அவரை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது; அவரது இருப்பிடத்தையும் அறிந்து கொண்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, “கே.பி.,யை தாய்லாந்தில் கைது செய்து விட்டோம்’ என, இலங் கை ராணுவம் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டது. இவர் பிடிபட்டதை மிகவும் கவுரவமாக, பெருமிதமாகக் கருதுகிறது இலங்கை அரசு.

ரகசிய இடத்தில் விசாரணை: கொழும்பு கொண்டு வரப்பட்ட கே.பி.,யிடம், மிகவும் ரகசியமான இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும், இலங்கை அரசு தரப்பில் நேற்று அறிவிக் கப்பட்டது. இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா கூறுகையில், “கே.பி.,யிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எங்கு கைது செய்யப் பட்டார் என்பது குறித்த தகவல்களைத் தற்போது வெளியிட முடியாது’ என்றார்.

தாய்லாந்து மறுப்பு: இதற்கிடையே, கே.பி., தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை அந்நாட்டு பிரதமர் அபிஜித் வெஜ்ஜாஜிவா மறுத் துள்ளார். அவர் கூறுகையில், “கே.பி., கைது செய்யப்பட்டுள்ளது குறித்த உறுதியான தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஆனால், அவர் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை. வேறொரு நாட்டில் தான் அவர் கைது செய்யப் பட்டுள்ளார்’ என்றார்.

மலேசியாவில் கைதா? இந்நிலையில், கே.பி., கைது விவகாரம் குறித்து புலிகள் ஆதரவு இணையதளத்தில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் தான் கே.பி., தங்கியிருந் தார். கடந்த 5ம் தேதி, கோலாலம்பூரில், “மஜீத் இந்தியா’ என அழைக்கப்படும் பகுதியில் உள்ள “ரியூன்’ என்ற ஓட்டலுக்கு அவர் சென்றார். இங்கு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனின் சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தங்கியிருந்தனர். அவர் களை சந்திப்பதற்காகவே கே.பி., அங்கு சென்றார். அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து, மொபைல் போனில் பேசுவதற்காக வெளியில் வந்த அவர், மீண்டும் திரும்பவில்லை. மலேசிய உள வுத் துறையின் ஒத்துழைப்புடன், இலங்கை உளவுத் துறையால் அவர் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வெளிநாட்டு உளவுத் துறையின் உதவியும் இந்த விஷயத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடத்தலில் மலேசிய உள வுத் துறைக்கு உள்ள தொடர்பை மறைத்து, திசை திருப்பும் நோக் கத்துடனேயே, தாய்லாந்தில் அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, கே.பி.,யை விமானம் மூலமாகக் கொழும்பு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த இணைய தளத்தில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், மலேசிய அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர்.


காட்டிக் கொடுத்தது “சாட்டிலைட் போன்’:
கே.பி., இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த மே மாதம் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல் லப்பட்டார். அவரது உடல் கைப் பற்றப்பட்ட போது, அவர் பயன்படுத்திய சாட்டிலைட் போன் ஒன்றும் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட் டது. இந்த போன் மூலமாகவே பிரபாகரனும், கே.பி., யும் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். கைப்பற்றப் பட்ட இந்த போன் தான், கே.பி., இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பெரிதும் உதவியது. கே.பி.,யைத் தேடி தாய் லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு மூன்று குழுக்கள் விரைந்தன. அவரை இலங்கை கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக் கம் அல்ல; அங்கேயே தீர்த்துக் கட்ட திட்டமிட் டோம். ஆனால், சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. கே.பி.,யைப் போல் தலைமறைவாக செயல்படும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மேலும் சிலரையும் கைது செய்ய முயற்சி மேற்கொண் டுள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.


பங்குச் சந்தை ஏற்றம்:
புலிகளின் புதிய தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இலங்கை பங்குச் சந்தை நேற்று ஏற்றம் கண்டது. வர்த் தகம் துவங்கிய 90 நிமிடங்களில், இலங்கை பங்குச் சந்தையில் 0.7 சதவீதம் ஏற்றம் கண்டது. இது, கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிகரிப்பு என, பங்குச் சந்தை ஆர்வலர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், பிரபாகரன் மறைவுக்குப் பின், புதிய தலைமையின் கீழ் செயல்படத் துவங் கிய புலிகள் அமைப்புக்கு கே.பி., கைதானது, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *