டெல்லி: இந்த நிதியாண்டிலேயே 3500 பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது தேசிய வங்கிகளுள் ஒன்றான பாங்க் ஆப் பரோடா.
இவர்களில் 2000 பேர் எழுத்தர் பணிக்கும், 1000 பேர் அதிகாரிகள் பணிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள்.
நிர்வாகவியல் மற்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் பணிக்காக 500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இவர்களை கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று கேம்பஸ் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யவிருப்பதாகவும் இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்டி மல்லையா தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் லீகல் அன்ட் ஜெனரல் குழுமத்துடன் இணைந்து காப்பீட்டுத் துறையில் நுழையும் திட்டம் உள்ளதாகவும் மல்லையா கூறினார்.
பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் உடனடி மாறுதல்கள் எதுவும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply