புதுடில்லி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து, ஹெல்த் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை நடத்த உள்ளன.
இதுகுறித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் கூறுகையில், “இணைப்பு முறையின்கீழ் இப்படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இம்முறை படிப்பானது தொழில் அல்லது பணி செய்பவர்களுக்கு தங்களுடைய தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பணியில் இருந்து கொண்டே படிப்பை தொடர வழிவகை செய்கிறது. இந்த ஹெல்த் சயின்ஸ் படிப்புகளை பயில்வதன் மூலம், தங்களது தகுதிகளை மேம்படுத்தி கொள்ள முடியும். நேரடி தொடர் வகுப்புகள் மிகவும் பயன்படும் வகையில் அமைய, மற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன”, என்றார்.
மாணவர்களுக்கு இப்படிப்புகளை வழங்குவது தொடர்பாக, இரண்டு கல்வி நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தான போது, பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தொலைநிலைக் கல்வி இயக்குனர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் முகமது மீரஜ் மற்றும் அசுதோஷ் அகர்வால் ஆகியோர் உடன் இருந்தனர்.
Leave a Reply