மதுரை: “அதிகமாக படித்ததை காரணம்
காட்டி வேலை வாய்ப்பு வழங்க தயங்கக் கூடாது’ என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. சிவகங்கை மாவட்டம் மித்ரவயல் சேந்தங்குடியை சேர்ந்த வடிவுக்கரசு தாக்கல் செய்த ரிட் மனு: அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன்.
ஆனால், எனக்கு பதிலாக புதுவயலை சேர்ந்த லதா என்பவருக்கு அந்த பணி வழங்கப்பட்டது. எங்கள் ஊரில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் புதுவயல் உள்ளது. உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என அரசு உத்தரவில் உள்ளது. லதாவை நியமித்ததை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் வக்கீல், “”உயர்கல்வி படித்திருப்பதால் தேர்வு செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர்,” என்றார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், “”அதிகமாக படித்ததை காரணம் காட்டி, வேலை வாய்ப்பு வழங்க தயங்கக் கூடாது. மனுவை பொறுத்து லதா நியமனம் ரத்து செய்யப்படுகிறது,” என உத்தரவிட்டார்.
Leave a Reply