ஆட்டோமொபைல் துறையில் உலகில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முந்திக் கொண்டு செல்ல, இப்போது அந்த சீனாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா.
கடந்த ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான அரையாண்டு காலத்தில், க1.65 லட்சம் யூனிட் கார்கள், வேன்கள் மற்றும் சிறு வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது சீனா.
ஆனால் இந்த விஷயத்தில் சத்தமில்லாமல் சீனாவை ஓரங்கட்டியுள்ளது இந்தியா. இதே காலகட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ள கார்கள் மற்றும் ட்ரக்குகள் 2.30 லட்சம் யூனிட்டுகள்!
இந்திய சாதனையில் 60 சதவிகிதத்தைதான் சீனா இதுவரை செய்துள்ளது. அதுமட்டுமல்ல… ஆட்டோமொபைல் துறையில் பல நாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களே இன்சால்வென்ஸி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ, சீனாவை விட 18 சதவிகித வளர்ச்சியை சாதித்துக் காட்டியுள்ளது.
குறிப்பாக சிறிய கார் உற்பத்தியில் இன்று உலகில் யாரும் தொட முடியாத உச்சத்தில் உள்ளது இந்தியாதான் என்கிறது ஆட்டமொபைல் துறை ஆய்வு. உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் சிறிய கார்களிலும் தவறாமல் மின்னுவது ‘மேட் இன் இந்தியா’ என்ற சில்வர் ப்ளேட்டுகள்தானாம்!
ஐரோப்பாவில்தான் இந்தியக் கார் களுக்கு வரவேற்பும் மவுசும் அதிகமாம். இந்தியத் தயாரிப்புகள் மலிவு என்பது ஒருபுறமிருக்க, நல்ல மைலேஜ் தருவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பைக் தயாரிப்பிலும் இதே நிலைதான் நிலவுகிறது. இந்தியா பைக் தயாரிப்புகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவிகிதம் முன்னேற்றம் கண்டுள்ளது. விற்பனையிலும் 18 சதவிகித உயர்வு காணப்படுகிறது.
Leave a Reply