வாஷிங்டன் : இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக வங்கி நேற்று ஐந்து நாடுகளுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இதில், இந்தியாவிற்கு 4.345 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதில் 2 பில்லியன் டாலர்கள் வங்கி துறைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடன் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப் பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு 1.195 பில்லியன் டாலர் கடன் வழங்கப் படுகிறது. ஐந்தாவது பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது.
Leave a Reply