மைசூரூ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது, இன் போசிஸ் நிறுவனம் என, காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித் துள் ளார்.
மைசூரில் நேற்று, இன் போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச கல்வி மையத் தை, காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:
எனது கணவர் ராஜிவ், தகவல் தொழில் நுட்பத் துறைக்கு அடித்தளமிட்டவர். இதனால், அவர் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அவரது காலத்தில், கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது. இன்று நிலை மை தலைகீழாக உள்ளது. இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள், மக்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்தியுள்ளன; நாட்டின் பொருளாதார மேம் பாட்டுக்கு வழிவகுத் துள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும், திறனும் திகைப்பூட்டும் வகையில் உள்ளது. உலக அளவில் ஒரு இந்திய நிறுவனம் பேசப்படுவது சாதாரண விஷயமல்ல. இந்த பெயரை இன்போசிஸ் பெற்றுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தை, வெ றும் பணத்தால் மட்டும் எடைபோட்டு விடக்கூடாது. இந்திய சமூகத் தையே மேம்பட வைத்த பெருமை இந்நிறுவனத் துக்கு உண்டு.
இந்தியா வல்லரசாகும் சூழலை இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. சமூதாயத்தின் பொறுப் பை உணர்ந்து, நல்ல முறையில் இன்போசிஸ் செயல்படுகிறது. இவ்வாறு சோனியா பேசினார். இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய தாவது:
மைசூரில் 337 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள எங்கள் நிறுவனத்தில் 14 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில், இரண்டாயிரத்து 55 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது . பதவியை வேண்டாம் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தவர் சோனியா. தவிரவும் எதிர்ப்புக்கணைகளை பெரிய மனதுடன் தாங்கியவர். கண்டம் விட்டு கண் டம் வந்து வாழ்ந் தாலும், கலாசாரம்,மொழி அனைத் தையும் கடந்து இங்கு சொந்த பூமியாக அதற் கேற்ப வாழும் சோனியாவைப் போன்றவர்கள் ஒருசிலர் தான் உலகில் இருக்க முடியும் இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.
Leave a Reply