எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸில் இலங்கைப் படைவீரர்களுக்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
போலியான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் எந்தவொரு பாதுகாப்பு உத்தியோகத்தரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆர்ஜர்படுத்தப் போவதில்லை என அரசாங்கம், அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யுத்தக் போர்க் குற்றங்கள் தொடர்பிலான விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
எவ்வாறெனினும், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ராஜாங்கத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமெரிக்க காங்கிரஸில் நேற்று முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply