மும்பை: எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டியூப்ரோ) நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த ஆர்டர் கிடைத்ததை தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று 0.61 சதவீதம் அதிகரித்தன.
ஆந்திராவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை எல் அன்ட் டி நிறுவனம் நிறைவேற்ற உள்ளது. அதுதவிர, வேமகிரி என்ற இடத்தில் எரிவாயுவில் செயல்படும் மின் உற்பத்தி நிலையம், ஆலை ஓருங்கிணைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் நிறைவேற்ற உள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் ஆர்டர் இரண்டாயிரம் கோடியை தொட்டுள்ளது.
Leave a Reply