கோவை: கோவை ஐ.டி பூங்கா அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
கோவையில் பூங்கோதை செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் கணினி மையம் விரைவில் எல்லா கிராமங்களிலும் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனது.
அந்தந்த பகுதி மக்கள் பங்களிப்புடன் இம் மையம் தலா ரூ.1.50 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
இந்த மையங்கள் மூலம் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி செலுத்தலாம். பிறப்பு, இறப்பு, சிட்டா, பட்டா உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறலாம்.
முதல் கட்டமாக, பரீட்சார்த்த முறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஜனவரிக்குள் எல்லா மாவட்டங்களிலும் இம் மையம் அமைக்கப்படும்.
கோவையில் ஐ.டி. பார்க் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும். செப்டம்பர் இறுதிக்குள் மதுரை, நெல்லை , திருச்சி ஆகிய நகரங்களிலும் ஐ.டி. பார்க் திறக்கப்படும்.
இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதி 11 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி 21 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
Leave a Reply