மும்பை: சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த ரூ.7800 கோடி மோசடியில் அந்நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸுக்கும் பெரும் பங்கிருப்பதாக இந்திய தணிக்கை நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது.
இந்திய தணிக்கையாளர்களின் தலைமை மையமான ஐசிஏஐவின் இயக்குநர் (ஒழுங்கு நடவடிக்கை) அகர்வால் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த இந்தப் பெரும் மோசடியிலி அந்த நிறுவனத்தின் முன்னாள் சிஎப்ஓ ஸ்ரீனிவாசு மற்றும் இன்டர்னல் ஆடிட் செல்லின் முன்னாள் துணைத் தலைவர் விஎஸ் பிரபாகர குப்தா ஆகிய இருவருக்கும் பெரும் பங்குள்ளது.
இவர்களைத் தவிர, சத்யம் நிறுவனக் கணக்குகளை தணிக்கை செய்த கொல்கத்தாவின் பிரஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் நான்கு ஆடிட்டர்களுக்கும் இதில் பங்குள்ளது.
எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ் தல்லூரி, ஷிவ பிரசாத் மற்றும் சி.எச்.ரவீந்திரநாத் ஆகியோர்தான் அந்த நான்கு ஆடிட்டர்கள்.
இவர்கள் அனைவருக்கும் இந்திய தணிக்கை நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என அகர்வால் தெரிவித்துள்ளார்.
Leave a Reply