கொழும்பு:இலங்கை மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் கோப்பையை தவற விட்ட இலங்கை அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பின்: முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
இலங்கை மண்ணில் இந்தியாவின் சாதனைகள் மிகவும் குறைவு. கடந்த 1998 ல் இந்திய அணி இலங்கை மண்ணில் கோப்பை வென்றது. அதற்குப் பின் இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில், கோப்பை வெல்லவில்லை. தற் போது 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு தொடரில் கோப்பை வென்று அசத்தியுள்ளது. அனுபவ அசத்தல்: இத்தொடரின் நாயகனாக ஜொலித்தார் சச்சின். ஒரு சதம் உட்பட 211 ரன்கள் குவித்து இத்தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்ற டிராவிட் நம்பிக்கை அளித்துள்ளார். தோனி, யுவராஜ் வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹர்பஜன் மிரட்டல்: முத்தரப்பு பைனலில் 5 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஹர்பஜன். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர்களான மாத்திவ்ஸ், மலிங்கா ஆகியோருடன் ஹர்பஜன் பகிர்ந்து கொண் டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன், முத்தரப்பு தொடரின் வெற்றி இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இலங்கை பரிதாபம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில், அபார வெற்றியை எட்டிய இலங்கை அணி, பைனலில் கோப்பையை கோட்டை விட்டுள்ளது. இருப் பினும் இத்தொடரில் இலங்கை அணியின் செயல்பாடுகள் பாராட்டும் படியாக அமைந்தன. ஜெயசூர்யா, தில்ஷன் அதிரடியில் அசத்தினர். கண்டம்பி, கபுகேதரா ஆகியோர் தங்களை சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களாக நிலைநிறுத்தி உள்ளனர். பவுலிங்கில் மாத்திவ்ஸ், மலிங்கா, குலசே கரா, துஷாரா ஆறு தல் அளித் தனர்.
“டாப்-10′ ல் சச்சின்:முத்தரப்பு தொடரின் பைனலில் சதம் அடித்து அசத்திய சச்சின், ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் “டாப்-10′ ல் இடம் பிடித்துள்ளார்.இத் தொடருக்கு முன்,12 வது இடத்திலிருந்த இவர், 5 இடங்கள் முன்னேறி 737 புள்ளிகளுடன் 7 வது இடத்துக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு பின், மீண்டும் “டாப்-10′ பட்டியலில் நுழைந்துள்ளார் சச்சின். இந்திய கேப்டன் தோனி (825 புள்ளி) மற்றும் யுவராஜ்(778 புள்ளி) முறையே தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றனர். 2 வது இடம்அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முத்தரப்புதொடரின் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, 2 வது லீக் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து பைனலில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
Leave a Reply