மும்பை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர் அரசு காண்டிராக்டைப் பெற்றுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது டிசிஎஸ்.
சிங்கப்பூர் அரசு [^]க்கு சொந்தமான பீப்பிள்ஸ் அஸோசியேஷன் நிறுவனத்துக்கு தேவையான அப்ளிகேஷன் மேனேஜ்மெண்ட் பணிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிசிஎஸ் கவனிக்கும். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என்று டிசிஎஸ் அறிவிக்கவில்லை. ஆனால் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் இது என்று அறிவித்துள்ளது.
Leave a Reply