சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாநில பாடதிட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிவித்தார்.
இது குறித்து, டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் 2011 ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இப்போது படிக்கும் அதே பள்ளியில் படிப்பை தொடர நினைக்கும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தேவையில்லை. வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை விருப்ப தேர்வாக எழுதலாம். தேர்வை பள்ளிகளே நடத்தலாம்.
இந்த ஆண்டு (2010) மார்ச்சில் 7 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு இந்த ஆண்டு முதலே மதிப்பெண்ணுக்கு பதிலாக “கிரேடு” வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால் அவர்கள் எடுத்த மதிப்பெண் சதவிகிதம் கொடுக்கப்படும். மாநில பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
Leave a Reply