காந்தி நகர்: “”விமானப் படை விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சீன விமானப் படையோடு ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கே இந்தியாவில் உள்ளது. இந்திய விமானப் படையில் பணியாற்றும் பைலட்டுகளில், 100க்கும் மேற்பட்டோர் வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,” என, விமானப் படை தலைமை தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: விமானப் படையில் பதவி உயர்வுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் இல்லை. 24 முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்தும் பதவி உயர்வு இல்லை என்கிற போது, மாற்று வாய்ப்புகளைத் தேடியே பலர் செல்கின்றனர். அந்த அடிப்படையில்தான், 100க்கும் மேற்பட்ட பைலட்டுகள் வி.ஆர்.எஸ்., (விருப்ப ஓய்வு) கேட்டு விண்ணப் பித்துள்ளனர். தற்போது, தனியார் விமான போக்குவரத்தில் மந்தமான நிலைமை காணப் படுவதால், 100 பேர் மட்டுமே விண்ணப்பித்துள் ளனர். நிலைமை மேம் பட்டால், வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பிப் போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பைலட்டுகளின் வி.ஆர்.எஸ்., விண்ணப் பங்களை பரிசீலிக்க அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை விமானப் படை அமைத்துள்ளது. இந்த குழுவினர் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தீவிரமாக பரிசீலித்து, வி.ஆர்.எஸ்., கேட்பதற்கான காரணங்கள் நியாயமாக இருந்தால், அதை வழங்குவர். நமது விமானப் படையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சீன விமானங்களோடு ஒப்பிடுகையில், நாம் மூன்றில் ஒரு பங்கு விமானத்தையே கொண்டுள்ளோம். அதனால், விமானப் படையின் திறனை அதிகரிக்க மேலும் பல விமானங்களை வாங்க வேண்டியது அவசியம். விமானப் படையின் பலத்தை அதிகரிக்க தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.
இருப்பினும், பலம் அதிகரிக்க நாட்களாகும். விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தாலும், அவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே டெலிவரி செய்யப்படுகின்றன. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில், சீனா எந்த விதமான ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை என்பதே எங்களின் கருத்து. எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, வான் வெளி கண்காணிப்பு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு என, பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாடு பல சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சவால்களை எல்லாம் ராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமின்றி, பேச்சுவார்த்தைகள் மற்றும் பொருளாதார ரீதியான விஷயங்களை பின்பற்றுவதன் மூலமும் தீர்க்க முற்பட வேண்டும். இவ்வாறு நாயக் கூறினார்.
Leave a Reply