தர்மபுரி: தர்மபுரியில் சர்வதேச இறகுப்பந்து போட்டி நடத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.90 லட்சத்தில் வீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஆறு ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது.
சில ஆண்டுக்கு முன் வரை விளையாட்டரங்கம் போதிய பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. சுற்றுச்சுவர் இல்லாததால், இரவில் பல்வேறு சமூக விரோத செயல் நடந்தது. விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் கோரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது. தற்போது ஸ்கேட்டிங், வாலிபால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, இறகுப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தனி மைதான வசதி, விடுதி உள்ளது.
இந்நிலையில் விளையாட்டரங்களில் சர்வதேச இறகுப்பந்து விளையாட்டு போட்டிகள் நடக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசு பங்களிப்பு 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், பொது மக்கள் பங்களிப்பு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ன மொத்தம் 90 லட்சம் ரூபாயில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.ஒஒரே நேரத்தில் நான்கு இறகுப்பந்து மைதானம், இரண்டு வாலிபால் மைதானம், ஒரு கூடைப்பந்து மைதானம் என தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து பயன்படுத்தும் வகையில் பல்நோக்கு விளையாட்டு அரங்கமாக கட்டப்பட்டு வருகிறது. 500 பார்வையாளர் அமர்ந்து போட்டியை ர்வையிட மேல்தளத்தில் இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. காற்றோட்ட வசதி, மழைநீர் கட்டமைப்பு வசதியுடன் பகல் நேரத்தில் மின் விளக்கு இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு அரை வட்ட கூரை வடிவத்துடன் தமிழகத்திலேயே முன்மாதிரி வடிவத்தில் விளையாட்டு அரங்கு தயாராகி வருகிறது.
கடந்த ஆறு மாதம் முன் அரை வட்ட கூரை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பணிகள் தொய்வடைந்தது. இதையடுத்து, தர்மபுரி கலெக்டர் அமுதா தீவிர முயற்சி மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தியதால் தற்போது முழுவீச்சில் பணி நடக்கிறது. மரத்தால் ஆன ஆடுகளம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பணி முடிந்தால் விரைவில் உள்விளையாட்டு அரங்கம் வீரர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருபா கூறும் போது, ”உள் விளையாட்டு அரங்க பணிகள் முடிந்தால் தர்மபுரி நகரில் உள்ள பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு இங்கு இலவசமாக இறகுப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவ, மாணவிகளின் விளையாட்டு தரம் மேம்படும், ” என்றார். தர்மபுரியில் சர்வதேச போட்டிகள் நடத்தும் அளவுக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இறகுப்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு சார்பில் அவர்களுக்கென விளையாட்டு விடுதி ஏற்படுத்த வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply