சென்னை: தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கு செப்., 24, 25ம் தேதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
போதிய உள்கட்டமைப்பு வசதியில்லை என்ற காரணத்தால் தர்மபுரி மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கடைசியாக நடந்த ஆய்வின் முடிவில் ஒருவழியாக இந்திய மருத்துவக் கழகம் இக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது.
மற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து, வகுப்புகள் நடந்துவரும் நிலையில், தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஷீலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்த ஆண்டுக்கான தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கற்பக விநாயகர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., மருத்துவ பட்டப் படிப்புக்கான இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் செப்., 24 மற்றும் 25ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உள்ள கலையரங்கில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
இதற்கான விவர அட்டவணை www.tn.gov.in www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
Leave a Reply