கோவை: மனநலம் பாதித்த சிறுவனை குணப்படுத்துவதாக கூறி, 82 ஆயிரம் ரூபாய் கட்டணம் கறந்த ஆயுர்வேத டாக்டர், போலீ சாரின் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்ப ஒப்படைத்தார். இவரது மருத்துவமனையை ரகசியமாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், கோவை மாநகரில் முகாமிட்டிருக்கும் போலி டாக்டர்கள், மாந்திரீகர் கள் சிலர் இடத்தை காலி செய்து தலைமறைவாகினர்.
திருவண்ணாமலை, வேலூர் ரோட்டில் வசிப்பவர் சரவணன் (40); அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஆர்த்தி (35). இவர்களது ஏழு வயது மகன் தினேஷ், பிறவியிலேயே மனநலம் குன்றியவன். பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்நிலையில், கோவைபுதூரில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தும் டாக்டர் ஒருவரின் விளம்பரத்தை “டிவி’யில் கண்டு நேரில் சென்றனர். “உங்களது மகனை போன்றே பலரும் என்னிடம் சிகிச்சை பெற வந்தனர்; நான் அளித்த சிகிச்சையில் ஒரு வாரத்திலேயே பூரண குணமடைந்துள்ளனர். உங்களது மகனையும் குணமாக்குகிறேன்; சிகிச்சை கட்டணமாக 5,000 ரூபாய் முன் பணம் செலுத்துங்கள்; பின்னர் எனது வங்கி கணக்கில் 77 ஆயிரம் ரூபாய் செலுத்துங் கள்’ என தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் சிகிச்சை பெற்று குணமடைந்ததாக கூறி, நோயாளிகள் சிலரது போட்டோவையும் காண்பித்துள்ளார். இவரது பேச்சை நம்பிய பெற்றோர், 82 ஆயிரம் ரூபாயை செலுத்தி, தங்க ளது குழந்தைக்கு சிகிச்சை பெற்றனர்.
டாக்டர் அளித்த மருந்து, மாத்திரைகளை ஒரு மாதம் வரை மகனுக்கு கொடுத் தும், குணமாகவில்லை. மீண்டும் டாக்டரை சந் தித்து முறையிட்ட போது, மேலும் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற் றோர், கோவை போலீஸ் கமிஷனர் சிவனாண்டியை சந்தித்து புகார் அளித்ததும், குனியமுத்தூர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். விசாரணைக்கு பயந்து தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஆயுர்வேத டாக்டர், சிறுவனின் கிசிச்சைக்காக பெற்ற 82 ஆயிரம் ரூபாயில் 50 ஆயிரத்தை ரொக்கமாகவும், மீத தொகைக்கு “செக்’காகவும் போலீசார் மூலம் ஒப்படைத்தார். சர்ச்சைக்குரிய டாக்டரின் மருத்துவமனையை ரகசியமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓட்டம்: கோவையில் அரசு பதிவு பெறாமல் பலரும் சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் பார்த்து பணம் கறந்து வருகின்றனர். சிலர், மாந்திரீகம் என்ற பெயரில் பில்லி, சூனியத்தை அகற்றி தொழில், குடும்ப அபிவிருத்திக்கு சிறப்பு யாகம் செய்வதாக கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர். இவர்களின் பிரதான விளம்பர களமே உள்ளூர் “டிவி’ சேனல்கள் தான். தினமும் இரவு 8.00 மணிக்கு துவங்கி, விடியற்காலை வரை “டிவி’யில் முகம் காட்டி ஆள் பிடிக் கும் வேலையில் ஈடுபட் டுள்ளனர்.
கோவைபுதூர் ஆயுர் வேத டாக்டர் மீதான போலீஸ் நடவடிக்கையை தொடர்ந்து, மாநகரில் முகாமிட்டிருக்கும் போலி டாக்டர்கள் மற்றும் பில்லி, சூனியம் மாந்திரீகர்கள் மத்தியில் கலக்கம் ஏற் பட்டு சிலர் மாயமாகிவிட் டதாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எட் டாம், பத்தாம் வகுப்பு கூட தேறாத பலர் டாக்டர் என்ற போர்வையில் சிகிச்சை அளித்து வருவதாக புகார் வருகிறது. போலி டாக்டர் கள், மாந்திரீகர்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்தோர் புகார் அளிக் கும் பட்சத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற் கொள் ளப்படும்’ என்றார்.
Leave a Reply