புதுடில்லி: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளதாக பெண்கள் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, கணவனை இழந்த பெண்கள் பல்வேறு குடும்ப இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களின் துயரை போக்கும் விதமாக காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த திட்டமிடப் பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காப்பீடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் மகளிர் முன்னேற்ற தொடர்பான பல்வேறு திட்டங்களும் அறிமுகப் படுத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply