இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார்.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஒரு வார பயணமாக நேற்று கேரளா வந்தார்.
கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திருவனந்தபுரம் வந்த அவர், தலைமை செயலகத்தில் முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்து பேசினார்.
பின்னர் சந்திரிகா குமாரதுங்கா நிருபர்களிடம் கூறியதாவது:
கேரளாவுக்கு வர நான் பலமுறை திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது தான் வர முடிந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அங்கு எனது கட்சி தான் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் இன்னும் அங்கு முழு அமைதி திரும்பவில்லை.
இலங்கையில் மக்கள் பீதியுடன் தான் வழ்ந்து வருகின்றனர். அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளது.
Leave a Reply