புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். அதில் சிக்கன திட்டமாக உடன் செல்லும் அதிகாரிகள் இருவர் குறைக்கப்பட்டனர். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம், ஜி-20 உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, இந்தியாவை பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டார்.
எனவே, தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையை தவிர்க்க தேவையான மேற்கொள்ளப்படும் ஆலோசனைகளில் முக்கியப் பங்காற்றுவார். பிரதமருடன், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், தேசிய பாதுகாப்பு செயலர் நாராயணனும் செல்கின்றனர். ஆனால், சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, உடன் அழைத்துச் செல்லும் அதிகாரிகள் சிலர் குறைக்கப்பட்டிருக்கின்றனர். நாளை ஒபாமா அளிக்கும் விருந்தில் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். நாளை மறுதினம் நடக்கும் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
Leave a Reply