திண்டிவனம்: மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில், அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் மீண்டும் துவக்கப் பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக் குப்பம் கிராமத்தைச் சுற்றியுள்ள 4,000 ஏக்கர் நிலத்தில், அனல் மின் நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 2008ம் ஆண்டு துவங்கியது.இத்திட்டத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் செயல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கிடப்பில் இருந்த திட்டப் பணிகள், தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. மத்திய அரசு அலுவலர்கள் நான்கு பேர், நிலங்களை ஆய்வு செய்யும் பணியை மேற் கொண்டுள்ளனர். மொத்த நிலப்பரப்பில், 100 ஏக்கருக்கு ஒரு இடம் தேர்வு செய்து, மண் பரிசோதனை செய்யவுள்ளனர்.இந்த ஆய்வறிக்கை அரசுக்கு கிடைத்தவுடன், அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி மேற் கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு, 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் போக, மீதமுள்ள 3,800 ஏக்கர் நிலம், விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
Leave a Reply