மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல்?-ஆப்கான் வாலிபரிடம் யுஎஸ் விசாரணை

posted in: உலகம் | 0

18-terror200நியூயார்க்: அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐ ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தீவிரவிசாரணைமேற்கொண்டு வருகிறது. அவருக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் ஒரு செப்டம்பர் 11 போன்ற தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அமெரி்க்கா சந்தேகமடைந்துள்ளது.

அந்த இளைஞரின் பெயர் நபிபுல்லா ஜசி. கடந்த 1999ம் ஆண்டு நியூயார்க் வந்த அவர் டென்வர் விமான நிலையத்தில் வாகன ஒட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

அவர் இதுவரை பாகிஸ்தானுக்கு நான்கு முறை போயுள்ளார் என்பதும், அவரது மனைவி தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதும்விசாரணைில் தெரியவந்துள்ளது.

அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த எப்பிஐ அதிகாரிகள், அவரிடம்விசாரணைமேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

மேலும், அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம்தாக்குதல்நினைவு நாளுக்கு முன்னதாக நியூயார்க்கில் இருந்து கொலரடோ மாநிலத்தின் அரோரா நகருக்கு சென்றுள்ள சில சந்தேகத்துக்கிடமான நபர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் எப்பிஐ அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகிறது.

எப்பிஐக்கு சமீபத்தில் நியூயார்க் நகரில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய நபர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரும் அவரது கூட்டாளிகளும் செப்டம்பர் 11 போன்ற ஒரு தாக்குதலை மீண்டும்தாக்குதல்நடத்தலாம் என்றும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தான் அவர்கள் நபிபுல்லாவை பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் சட்ட அமலாக்க பிரிவினர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபிபுல்லாவிடம் சதி தி்ட்டம் குறித்து விசாரணை [^] மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து எப்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,

நபிபுல்லாவுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் கடந்த 2005ல் லண்டனில் 56 பேரை பலி வாங்கிய ஹைட்ரஜன் பெராக்ஸைடு வகை குண்டுகளை தயாரித்து தாக்குதல் [^] நடத்தி திட்டமிட்டிருப்பதாகக் கருதுகிறோம்.

இதையடுத்து அதிக அளவு ரசாயனங்களை வாங்குபவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். சமீபத்தில் அதிக அளவில் வாங்கியவர்களின் பட்டியலும் பெறப்பட்டுள்ளது.

போலீசார் கொலரடோவில் இருக்கும் அவரது வீட்டிலும், அவரது மாமாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கம்யூட்டர், மொபைல் ஆகியவற்றை கைப்பற்றினர். அவற்றை ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.

இந்நிலையில் நபிபுல்லா தான் குற்றமற்றவன் என்று தெரிவித்துள்ளார். அவரது வக்கீல் கூறுகையில், அவர் அடுத்த மாதம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். அவர் அல்-கொய்தாவுக்கு நெருக்கமானவர்களை இதுவரை சந்தித்ததே கிடையாது.

அவர் கொலரடோவில் ஒரு காபி ஷாப்பை வாங்கவிருக்கிறார். அதற்காக தான் அங்கு சென்றார். இதை அவரிடம் அந்த கடையை விற்பனை செய்ய இருப்பவரும் உறுதி செய்துள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *