ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சேதம்

posted in: மற்றவை | 0

blackboxராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை சோதனை செய்த வல்லுநர்கள் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


ஆந்திரபிரதேச முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் கடந்த 2-ந்தேதி நல்லமலா காட்டில் விபத்துக்குள்ளானது. இதில் ராஜசேகர ரெட்டி மற்றும் 4 பேர் பலியானார்கள். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. அந்த பெட்டி “பெல்” ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் ஒப்படைத்து பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்பெட்டியின் ஒரு பகுதி சேதம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதில் முக்கியமாக கருதப்படும் “குரல் ஒலிப்பதிவு” கருவி சேதம் அடைந்துள்ளது.

இந்த தகவல் ஆந்திர மாநில உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டியிடம் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கோளாறை சரிசெய்ய இந்த கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளது என விமானத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான இந்த சி.வி.ஆர். 38 ரக ஹெலிகாப்டர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *