புதுடில்லி: ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறையை, நாடு முழுவதும் உள்ள ரயில்வே அலுவலகங்களில் அமல்படுத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் முறை, உள்துறை அமைச்சகத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதை முன்னின்று துவக்கினார்.
இந்த பயோ மெட்ரிக் அடையாள முறையை இந்தியன் ரயில்வேயில் உள்ள அலுவலகங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் 4.4 கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த அலுவலகங்களில் இவற்றை அமல்படுத்துவது என்பதை மண்டல ரயில்வே முடிவு செய்யும். பின்னர் இந்த முறை, அனைத்து உற்பத்தி மையங்களுக்கும் நீட்டிக்கப்படும். இவ்வாறு ரயில்வே உயர் அதிகாரி கூறினார்.
Leave a Reply