பிரசல்ஸ்:பெல்ஜியம் நாட்டில் பாலுக்கு கூடுதல் விலை அளிக்கக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் 30 லட்சம் லிட்டர் பாலை விளைநிலத்தில் கொட்டி எதிர்ப்பைக் காட்டினர் .பெல்ஜியம் நாட்டில் ஒரு கிலோ பால் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடியாகவில்லை.
மாடுகளின் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், பாலுக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும்,என கோரி பெல்ஜியத்தில் உள்ள மாட்டு பண்ணையாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு செல்லும் பால் வண்டி களை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.பிரசல்ஸ் நகரத்தருகே உள்ள கிராமத்தில், 300 டிராக்டர்களில் எடுத்து வரப்பட்ட பால் டாங்கர்களிலிருந்து 30 லட்சம் லிட்டர் பால் விளை நிலத்தில் கொட்டி நாசமாக்கப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு தங்கள் கண்டனத்தை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியனில் உள்ள மற்ற நாடுகளின் பால் உற்பத்தியாளர்களும் பெல்ஜியம் நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Leave a Reply