3,000 கால்நடை பணியாளர் 2 ஆண்டில் நியமிக்க முடிவு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_62017458678சென்னை:””தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் ஆய்வின் பயன் உழவர்களைச் சென்றடைய ஏதுவாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3,000 ஆயிரம் கால்நடைப் பணியாளர்கள் நியமிக்கப் படுவர்,” என தமிழக ஊரகத் தொழில் வளர்ச்சி மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கறவை மாடுகள் மூலம் அதிக பால் உற்பத்திக்கும், இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் உதவும், தானுவாஸ்-ஸ்மார்ட் தாது உப்புக் கலவையை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வெளியிட்டு பேசியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ஆராய்சிகளின் பலன் மக்களுக்கு சென்றடைய, இதுவரை 3,000 ஊழியர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 3,000 கால்நடை பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உள்ளுறைப் பயிற்சி தொகை, மாதம் 1,650 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கமுதல்வர் உத்தரவிட்டுள்ளார். கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் உணவில், தாது உப்புக் கலவையின் முக்கியத்து வத்தை கிராம விவசாயிகள் இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. இதைப் போக்க, கால்நடை மருத்துவர்கள் முன் வர வேண்டும்.இந்திய தரக்கட்டுப்பாடு வாரியத்தின் சிபாரிசுப்படி தயாரிக்கப்பட்ட தாது உப்பு கலவையில், 13 தாது உப்புக்கள் இருக்கும். எல்லா கால்நடை களுக்கும், இந்த தாது உப்புக்கள் தேவைப் படுவதில்லை.

மண்ணில் உள்ள தாது உப்புக்களின் அளவைப் பொறுத்து கால்நடைகளின் தேவையும் அமையும். இதன் விளைவாகத்தான், “தானுவாஸ்-ஸ்மார்ட்’ தாது உப்பு கலவை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தாது உப்பு, தேவை யான ஆறு உப்புக்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது.இந்த உப்புக் கலவை கால்நடைகளுக்கு கொடுக்கப் படுவதன் மூலம், கால்நடை இனப்பெருக்கம்,பால், இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கும். தற் போது வழங்கப்பட்டுள்ள தாது உப்பு விலை குறைவு.இவ்வாறு பொங்கலூர் பழனிசாமி பேசினார்.

விழாவில் தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத் தின் உதவி தலைமை இயக்குனர் பிரசாத், கால்நடை மருந்துவக் கல்லூரியின் ஊட்டச் சத்தியியல் துறை பேராசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *