மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை துணை தலைவர் அருள்பிரகாசத்திற்கு முதல்வர் வழங்கிய குற்றச்சாட்டு மெமோவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.அருள்பிரகாசம் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கும் கல்லூரி முதல்வர் சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது.
எனக்கு அக்., 9ம் தேதி 58 வயதானதால் அக்., 31ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆனால் கல்வியாண்டின் நடுவில் இருப்பதால் மீண்டும் 2010 மே 31ம் தேதி வரை பணியில் தொடர அனுமதி கோரி முதல்வருக்கு மனு செய்தேன். என்னை பணியில் தொடர அனுமதிக்காமல் ஆறு காரணங்களுக்காக குற்றச்சாட்டு மெமோ வழங்கினார்.
ஆக., 12ல் சில மாணவர்களை தூண்டிவிட்டு கல்லூரி பொருட்களை சேதப்படுத்தியதாகவும், எந்த அதிகாரமும் இன்றி முதல்வர்(பொறுப்பு) வகித்ததாகவும், ஆசிரியர்களை தவறாக வழிகாட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. முதல்வர் வழங்கிய மெமோவை ரத்து செய்ய வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அஜ்மல்கான், இளங்கோ வாதிடுகையில், மெமோ கொடுக்க முதல்வருக்கு அதிகாரம் இல்லை. ஆட்சி மன்ற குழுவுக்கு தான் உள்ளது,” என்றனர். நீதிபதி கே.என்.பாஷா, “”முதல்வர் வழங்கிய மெமோவுக்கு இடைக்கால தடை விதித்து,” உத்தரவிட்டார்.
Leave a Reply