ஆப்கனில் இந்திய தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு ; 14 பேர் பலி

posted in: உலகம் | 0

tbltopnews1_1015871764காபூல்: ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். காலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் இது போன்று அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆப்கன் தலைநகரம் காபூலில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இந்த தூதரகம் முன்பாக இந்திய நேரப்படி காலை 9. 30 மணி அளவில் பலத்த சப்தத்துடன் வெடி சப்தம் கேட்டது. அப்போது இந்த பகுதியில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பெரும் புகை மூட்டம் கிளம்பியது. குண்டு வெடிப்பில் சிக்கி பலர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் 7 பேர் இறந்து விட்டதாகவும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பில் இந்திய தூதரக சுவர் சேதமுற்றது. ஜன்னல் கதவுகள் அதிர்வில் பறந்தன. இந்தியர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. காயமுற்றவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலை படை தாக்குதலா ? சம்பவம் நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் எரிந்து சாம்பலாகிப்‌போனது. இதில் ஒரு கார் ஐ.நா., எம்பளம் பொறிக்கப்பட்டுள்ளது. நடந்திருக்கும் தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி பாகிஸ்தானில் உள்ள அல்ஜசீரா இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 7 ம் தேதியும் இதே போல் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. தற்போது நடந்த இடத்தில் இந்திய அதிகாரிகள் யாரும் சிக்கியுள்ளார்களா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கனை பொறுத்த வரையில் இந்தியா பல்வேறு விதமாக வளர்ச்சி பணிகளுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகள் செய்து வருகிறது . இருப்பினும் அங்குள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமுற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் சிக்கி இத்தாலிய படை வீரர்கள் பலர் காயமுற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *