கோவை: கோவையிலுள்ள வட் டார போக்குவரத்து அலு வலகங்களில் விண்ணப் பதாரர்களிடம் கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இதில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள் ளன. எல்.எல்.ஆர்., மற் றும் டிரைவிங் லைசென்ஸ் பெற வருவோரிடம் “கொடி நாள்’ நிதி வசூலிக்கப்படுகிறது.
ஒரு கொடிக்கு அதிக பட்சமாக 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். கொடி நாள் நிதியாக இவ்வளவு தொகை ஏன் வசூலிக்கப்படுகிறது, என்று விண்ணப்பதாரர் கேள்வி எழுப்பினால், “லைசென்ஸ் வேணுமா, வேண்டாமா?’ என்று பணியாளர்கள் மிரட்டும் தொனியில் கேட்கின்றனர். கொடி நாள் நிதி தர மறுப் போருக்கு, லைசென்ஸ் தர பணியாளர்கள் மறுக்கின்றனர். இதனால், பலரும் அதிருப்தி அடைந்து வேண் டா, வெறுப்பாக கொடியை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதம் தோறும் கொடி விற்பனை செய்ய எங்களுக்கு இலக்கு நிர்ணயித் துள்ளனர். அதை எட்டுவதற்காக சில நேரங்களில் அதிக தொகைக்கு கொடியை விற்க வேண்டிய நிலை ஏற் படுகிறது. வழக்கமாக ஒரு கொடியை 25 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்; அதற்கு அதிகமாக விற் பனை செய்வதில்லை. கொடி விற்பனை செய்யப் பட்ட தொகைக்கு நாங்கள் முன்னாள் படை வீரர்கள் நலத் துறையிடம் ரசீது பெற்று கொடுக்கிறோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: எங்கள் துறையின் சார் பில், கொடி நாள் நிதி வசூல் ஆண்டு முழுவதும் நடக்கிறது. மத்திய அரசு துறைகள் மட்டுமின்றி, மாநில அரசின் 48 துறைகளின் அதிகாரிகள் கொடி நாள் நிதி வசூல் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்ட கலெக்டர் மாதம் தோறும் ஒவ்வொரு துறைக்கும் கொடிநாள் நிதியாக எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும், என்று இலக்கு நிர்ணயிக்கிறார். அதன்படி, சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நிதி வசூலித்து எங்களிடம் ஒப்படைக்கின்றனர். அதற்குரிய ரசீதையும் கொடுத்து விடுகிறோம்.
கலெக்டரால் நிர்ணயிக்கப்படும் இலக்குக்கு தகுந்தாற் போல் அரசு துறைகளின் அதிகாரிகள், கொடியின் விலையை நிர்ணயம் செய்து கொள் கின்றனர். கொடிக்கென்று நாங்கள் அதிகபட்சம் 20 முதல் 25 ரூபாய் வரை வசூல் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் கொடிக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவது குறித்து விளக்கம் கோரப்படும். இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.
Leave a Reply