இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரிப்பு

8771மும்பை: இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு கணக்கெடுப்பினை இந்தி‌யன் வங்கி வெளியிட்டுள்ளது.

இதில், கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 தேதியுடன் முடிந்த காலாண்டு கணக்கெடுப்பில், வங்கியின் நிகர லாபம் 282.92 கோடி ரூபாயாக இருந்தது. இது இந்தாண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி 371.98 கோடி ரூபாயாக உள்ளது. இதே போல மொத்த வருமானமும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில், வங்கியின் மொத்த வருமானம் 2174.37 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு 1900.93 கோடியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *