வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் -இ – தொய்பாவினர் போட்டியிருந்த சதித் திட்டத்தை எப்.பி.ஐ., அதிகாரிகள் முறியடித்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
டேவிட் கோல்மேன் ஹெட்லி (43) என்பவர் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரை எப்.பி.ஐ.,யின் பயங்கரவாத தடுப்புப் படையினர் கைது செய்தனர். ஓஹரே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிலடெல்பியாவிற்கு செல்லவிருந்த அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் பாக்., வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரின் பெயர் தகாவூர் உசேன் ராணா (48).கைதான ஹெட்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ஹர்கத் – உல் – ஜிகாத் இஸ்லாமி என்ற அமைப்பின் செயல்தலைவரான இலியாஸ் காஷ்மீரி மற்றும் பல லஷ்கர் -இ- தொய்பா தலைவர்களுடன் தொடர்புடையவர்.
ஹர்கத் – உல் – ஜிகாத் இஸ்லாமி அமைப்பு அல்-குவைதாவுடன் தொடர்புடைய அமைப்பு.ஹெட்லிக்கும் லஷ்கர் -இ- தொய்பா அமைப்பின் தலைவர்கள் சிலருக்கும் இடையே கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதிலிருந்து, ஹெட்லி மூலம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.இம்மாதம் பாகிஸ்தான் சென்று, அங்கு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களைச் சந்திக்க ஹெட்லி திட்டமி
Leave a Reply