இனவெறியை எதிர்த்து இந்தியப் பெண் ‘ஸ்கை டைவிங்’

posted in: உலகம் | 0

tblworldnews_15656244755லண்டன் : பிரிட்டனில், “இனவெறி மற்றும் பாசிசம்’ ஆகியவற்றை எதிர்த்து போராட நிதி திரட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 14 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து “ஸ்கை டைவிங்’ மூலம் குதித்து சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரூபி கவுர் (22). இவர், முதுகுத் தண்டுவட பிரச்னை காரணமாக, சக்கர நாற்காலியிலேயே அமர்ந்திருப்பார். இவர், மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில், உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர், மகாத்மா காந்தியின் மீது அதிக பற்றுக் கொண்டவர்.இவர், “இனவெறி மற்றும் பாசிசம்’ ஆகியவற்றை எதிர்த்து போராட நிதி திரட்டும் முயற்சியாக, 14 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து கீழே குதிக்க திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, “இனவெறி மற்றும் பாசிசம்’ ஆகியவற்றை எதிர்த்து பிரசாரம் செய்யும், பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு அமைப்புகளுக்கு வழங்க உள்ளார்.சமீபத்தில், பிரிட்டனில் நிகழ்ந்த இனவெறி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே, ரூபி கவுர் இத்தகைய முடிவு எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *