பெங்களூரு : கார்நாடகாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வந்துள்ளது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயலப்டும் டெக்னாலஜி நிறுவனங்கள்.
இன்போசிஸ் டெக்னாலஜி , பயாகான் டெக்னாலஜி நிறுவனங்கள் தலா 3000 வீடுகள் கட்டி தர முன்வந்துள்ளன. இரு நிறுவனங்களும் தலா 30 கோடி ரூபாய் செலவில் வீடுகளை கட்டித்தரவிருக்கின்றன. ஒரு வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசிய இன்போசிஸ் சேர்மன் நாராயண மூர்த்தியும், பயோகான் சேர்மன் கிரண் மஜூம்தாரும் மறுசீரமைப்புக்கு உறுதியளித்துள்ளனர். விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி தாங்கள் அளிக்கவிருக்கும் உதவி குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply