ஜனாதிபதி அரியாசனத்தில் ஏற்றவும், அதிலிருந்து விலக்கவும் தமக்கு பலமிருப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஜனாதியாக அரியாசனம் ஏற்றியதாகவும், அதிலிருந்து விரட்டியடிக்கக் கூடிய சக்தியும் தம்மிடம் இருப்பதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு கோரி ஜே.வி.பி.யினால் நடாத்திய பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி, அன்றைய தினம் வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெற்குத் தேர்தல்களுடன் ஆளும் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதாகவும் விரைவில் பாரிய தோல்விகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply