ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அரசாங்கமே அதற்கு பெறுப்பு சொல்ல வேண்டும் : மங்கள சமரவீர

posted in: உலகம் | 0

mangala01ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


வரிச் சலுகைத் திட்டம் மறுக்கப்படக் கூடிய சூழ் நிலை ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்கள் மற்றும் ஊடக அடக்குமுறைகளே வரிச் சலுகைத் திட்டம் மறுக்கப்படக் கூடிய பின்னணியை உருவாக்கியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய வெலிக்கடையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அமைச்சுப் பதவியை வகி;க்கும் காலத்திலேயே ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்;டம் இழக்கப்படக் கூடிய அபாயம் குறித்து சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தி அதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமை நிலைமைகளை பேணுவதன் மூலம் வரிச் சலுகைத் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளக் கூடிய பின்னணியை இந்த அரசாங்கத்தினால் உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *