ஜெய்ப்பூர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி

posted in: மற்றவை | 0

tbltopnews1_46608698369ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் அருகே பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஐந்து பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 150 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில், சீதாப்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது.

இங்கு நேற்று வழக்கமாக எடுக்கப்படுவது போல, குழாய் மூலம் பெட்ரோல் எடுக்கும் பணிகள் நடந்தன. அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சேமிப்பு கிடங்கு முழுவதும் தீ மளமளவென பரவியது.

இந்த பயங்கர தீ விபத்தில், ஐந்து பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் “ஆம்பு லன்ஸ்’ மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதி முழுவதற்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் பயங்கரமாக எரிந்த தீயால், அந்தப் பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி, அருகாமையில் வசித்து வருபவர்கள் வேறு இடங் களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *