வாரனாசி:பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளது. அவரை உ.பி., முதல்வர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவதாக கூறப்படுவது தவறான தகவல்’என., காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறினார்.காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது:மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் பா.ஜ., கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது.
தற்போது இந்த தோல்விக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை காரணமாக கூறுவது, ஆச்சர்யம் அளிக்கிறது. தோல்விக்கான காரணத்தை யார் மீதாவது சுமத்த வேண்டும் என்பதற்காக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மீது சுமத்தியுள்ளனர். காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காகவும், சோனியாவின் சிறப்பான தலைமைக்காகவும் தான், மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்.
காங்.,பொதுச் செயலர் ராகுலை, உ.பி., மாநில முதல்வர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவதாக வெளியான தகவல் தவறானது. நாட்டுக்கே தலைமையேற்று நடத்தும் அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது. பிரதமர் ஆவதற்கான தகுதி அவருக்கு உள்ளது.இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
Leave a Reply