லக்னோ: தீபாவளி என்றாலே அதிரவைக்கும் பட்டாசுகளும், அது வெளிப்படுத்தும் புகையும்தான் நினைவுக்கு வரும். இவைகள் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று பட்டாசுகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை தயாரிக்க, பட்டாசுத் தயாரிப்பாளர்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இந்த வகை பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், இந்த பட்டாசுகளில் அதிக புகையும் வராது என்று தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து லக்னோவைச் சேர்ந்த மொத்த பட்டாசு விற்பனையாளர் குல்ஷர் ஆசாத் என்பவர் கூறுகையில், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகம் உள்ளது; எனவே நாங்களும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பட்டாசுகளை அறிமுகப்படத்தி உள்ளோம்; இவை விலை மலிவானவை, அதிகம் புகையை வெளியிடாதவை; சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை என்றார்.
Leave a Reply